பஞ்சாப் – பெங்களூர் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… பஞ்சத்திலிருந்து மீளுமா பஞ்சாப்…?

பஞ்சாப் – பெங்களூர் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… பஞ்சத்திலிருந்து மீளுமா பஞ்சாப்…?

பஞ்சாப் – பெங்களூர் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

 பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், பஞ்சாப் 2 வெற்றிகளும், பெங்களூர் 5 வெற்றிகளும் பெற்றுள்ளன.

பஞ்சாபைப் பொருத்தவரை, முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டுள்ளது. தற்போது நல்லதொரு ஃபார்மில் இருக்கும் பெங்களூரை இந்த ஆட்டத்தில் சந்திப்பது பஞ்சாபுக்கு சவாலாகவே இருக்கும். பஞ்சாபை பொருத்தவரை, கேப்டன் கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினாலும் மயாங்க் அகர்வால் அந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

பெங்களூரைப் பொருத்தவரை, பேட்டிங், பவுலிங் என எல்லா விதத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நடப்பு சீசனில் இதுவரை ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து கோப்பைக் கனவுடன் முனைப்பு காட்டுகிறது. டி வில்லியர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் தொடர்கிறார்.பவுலிங்கைப் பொருத்தவரை ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜும் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *