எனது நோக்கமே பெங்களூர் அணிக்கு கோப்பையை வெல்வது தான் -யுஸ்வேந்திர சஹல்

எனது நோக்கமே பெங்களூர் அணிக்கு கோப்பையை வெல்வது தான் -யுஸ்வேந்திர சஹல்
நான் அணியில் விளையாடுகிறேனோ இல்லையோ எனது நோக்கம் பெங்களூர் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுப்பதுதான் என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹல் தெரிவித்துள்ளார்.
chahal

அபுதாபி:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது.

இந்தநிலையில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு நாங்கள் சீரான, சமபலத்துடனான அணியை பெற்றிருக்கிறோம். குறிப்பாக பந்துவீச்சில் சிறந்த நிலையில் இருக்கிறோம். 3 ஆட்டங்களில் 2 ல் வெற்றி பெற்று இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. விராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

2016 ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இருந்த உணர்வுபோல் தற்போது இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கி இருப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கிறது. நான் அணியில் விளையாடுகிறேனோ இல்லையோ எனது நோக்கம். பெங்களூர் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுப்பதுதான் என்று அவர் கூறினார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *