அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்பு வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்..

அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்பு வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்..

அரியர் மாணவர்களுக்கு இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டிய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், இதற்கு கல்வியாளர்களுக்கு மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரியர் தேர்வை ரத்து செய்து 8 வாரத்திற்குள் தேர்வு நடத்தவும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையப்பக்கத்தில் நேற்று அரியர் தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், 1990 முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதியாக 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் 2021, பிப்ரவரி 2022, ஆகஸ்ட் 2022 ஆகிய மூன்று செமஸ்டர்களில் தேர்வு எழுதலாம் எனவும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரியர் பாடங்களில் தேர்ச்சி அடைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – மாஸ்க் இல்லையா ? எடு 10,000 அபராதம்… உத்திரப்பிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு

அதே போல பிற பொறியியல் கல்லூரிகள், தொலைதூரக் கல்வியில் கடந்த 2001 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் இறுதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *