Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழ் நாடு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை ,இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை!!!

saravanan by saravanan
November 17, 2020 10:08 AM GMT+5:30

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு மழை பெய்து வருகின்றது.

சில நாட்கள் மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமாக சென்னையில் தொடர்ந்து இருந்து வந்தது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் பலத்த மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், காட்டங்களத்தூர் போன்ற இடங்களில் காலையில் இருந்தே நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களின் வீடுகளில் மழை நீர் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கியது நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நல்ல மழை பெய்தது.

“பெண் குழந்தைகளுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது; ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே முக்கியம்” — நடிகை ரேவதி

சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: உயிரிழப்புகள் அதிகரிப்பு; நூற்றுக்கணக்கானோர் தொடர்பில் இல்லை – பீகாரிலும் உஷார் நிலை

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றது. 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரபடி அணையின் நீர்மட்டம் 21 அடியை நெருங்கியுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நிமிடமும் நீர்மட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 22அடியை எட்டியவுடன் உபரிநீரை திறந்துவிட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகின்றது. நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் புழல் ஏரியில் உள்ளது. பூண்டி, சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தலைநகர் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அங்கு ஒரே நாளில் 17 செ.மீ. மழை கொட்டியது. இன்று மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிதுள்ளது இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்தது.

இதனால் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட பல மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக,கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. கடலூரில் உள்ள கெடிலம், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மூழ்கியது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.

இந்த நிலையில் இன்று (17.11.2020) கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், ‘குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேகமான இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவைதான் எதிர்பார்க்கிறது மத்திய அமைச்சர் பேச்சு!!!

Next Post

முறைகேடான டெண்டர் அமைச்சர் பதவி விலகவேண்டும் – மு. க. ஸ்டாலின் அறிக்கை…

Next Post

முறைகேடான டெண்டர் அமைச்சர் பதவி விலகவேண்டும் - மு. க. ஸ்டாலின் அறிக்கை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version