Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே பச்சை துரோகம் செய்யும் முதல்வர்: கனிமொழி பேச்சு

February 9, 2021

புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம், விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர்,  பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி மதுரையில் இன்று இரண்டாம் நாள் தேர்தல் சுற்று பயணத்தை இன்று மேற்கொண்டார்,அதில் செல்லூர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசினார்.

கனிமொழியின் புதிய அலுவலக அறை!

அரசியலில் பெண்களுக்கு சவால்கள் அதிகம்!!

தமிழர்களுக்கு யாரும் இந்தியா குறித்து பாடம் எடுக்க வேண்டாம்.. சாடிய கனிமொழி

” அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என்றார் ஆனால், 10 ஆண்டுகளாக மதுரையில் சாலைகளே போடப்படவில்லை என்பது தெரிகிறது.மதுரையில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களைக் கனிமொழி பார்க்க வேண்டும் என செல்லூர் ராஜூ அழைத்தார். அனால் இங்கு வந்த போதுதான் தெரிந்தது எந்தத் திட்டமும் செயல்படவில்லை என்று . எதையும் செயல்படுத்தாத ஆட்சிதான் இங்கு நடக்கிறது.

திமுக ஆட்சியில் ரூ.1,500 கோடியில் பல மேம்பாலங்கள், கூட்டுக் குடிநீர் திட்டம் மதுரை அரசு மருத்துவமனை மேம்பாடு எனப் பல நலதிட்டங்கள் நிறைவேற்றபட்டது. ஜம்மு, மங்கள்புரி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி. எந்தப் பணியும் நடக்கவில்லை. இதனால்தான் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை அடிக்கல் நாயகன் என்று அழைக்கிறேன்.இதைக் கேட்டு அவர் வருத்தப்படுகிறார்.

எனது பிரச்சாரப் பயணத்தை எடப்பாடியில்தான் தொடங்கினேன். அங்கு எதுவும் செய்யவில்லை என்றேன். உடனே இந்தந்தத் திட்டங்களுக்கெல்லாம் அடிக்கல் நாட்டியுள்ளேன் என முதல்வர் பட்டியல் கொடுத்தார். அடிக்கல் மட்டும்தான் நாட்டுகிறீர்கள், எதையும் செய்து முடிப்பதில்லை என்றுதான் நானும் கூறுகிறேன்.

மதுரையில் தமிழ்த் தாய்க்குச் சிலை அமைப்பதாகக் கூறினர். இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை. ஆனால், திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் சொன்னபடி சிலை அமைத்தவர் கருணாநிதி. இதுதான் திமுகவுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் சொல்வதைச் செய்வோம். அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதையும் செய்ய மாட்டார்கள்.

ரூ.1000 கோடி செலவிட்டு தமிழகம் வெற்றி நடைபோடுவதாக அதிமுக விளம்பரம் செய்கிறது. தமிழகத்தை நடக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டீர்கள். வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லை. புதிய தொழிற்கூடங்கள் இல்லை. அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றித் தரவில்லை. பாதி ஊதியத்தைக் குடிநீருக்கே செலவிடும் நிலை. நியாயவிலைக் கடைகளில் நியாயமாக எதுவும் வழங்கப்படுவதில்லை. வசதியானவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறது.

தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறார்கள். இவ்வளவு முதலீடு வந்திருந்தால் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்?. நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நான் சந்தித்தவர்களோ, அவர்களுக்குத் தெரிந்தவர்களோ என யாருமே வேலை கிடைத்ததாகக் கூறவில்லை. அப்படி ஒருவரை இதுவரை சந்திக்கவில்லை.

செல்லூர் கண்மாயைச் சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் இக்கண்மாயைப் பார்த்தபோது ஆகாயத் தாமரை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. தூர் வாரியிருந்தால் தண்ணீர் நிறைந்திருக்கும். ஆகாயத் தாமரை இருந்திருக்காது. அதற்கு ஒதுக்கிய பணம் என்ன ஆனது? இதேபோலத்தான் தமிழகத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படும் தொழில் முதலீடுகளும். அந்தப் பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை. பெண் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.81 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர். இந்தப் பணமும் எங்கே போனது எனத் தெரியவில்லை. கணக்கு மட்டுமே எழுதப்படுகிறது.

கரோனாவின்போது முகக்கவசம், மருந்து, கிட் வாங்க எனக் கணக்கு எழுதினர். தனக்கு என்ன வருமானம் என ஆட்சியாளர்கள் கணக்குப் போடுகிறார்களே தவிர, மக்களுக்கு என எதையும் செய்வதில்லை.

புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம், விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர்,  பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார் தனது கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையிலும், இந்த ஆட்சி துரோகம் இழைத்து வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் கற்றுத்தர வேண்டும்”.

இவ்வாறு புதூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆன்லைன் கல்வியை வழங்குவதில் சிறப்பாகச் செயல்படும் இந்தியா- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

Next Post

வெளியானது டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1 தேர்வு முடிவுகள்:

Next Post

வெளியானது டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1 தேர்வு முடிவுகள்:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version