சென்னையில் ஹோட்டல், கிளப்களில் புத்தாண்டு கொண்டாட தடை : போலீஸ் கமி‌‌ஷனர் அறிவிப்பு

சென்னையில் ஹோட்டல், கிளப்களில் புத்தாண்டு கொண்டாட தடை : போலீஸ் கமி‌‌ஷனர் அறிவிப்பு

சென்னையில் ஹோட்டல் மற்றும் கிளப்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை சுமார் ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். மேலும், மரக்கன்றையும் நட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு சார்பில் காவல் துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்த சென்னையில் 12 துணை கமி‌‌ஷனர் சரகங்களிலும் 12 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Read more – விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

அரசு மேற்கொண்ட நடவடிக்கையின்படி, சாலைகள், ஹோட்டல்கள், கிளப் மற்றும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.

ஹோட்டல் மற்றும் கிளப்களில் புத்தாண்டு கொண்டாட குடும்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டணசீட்டு வசூலித்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஹோட்டல் மற்றும் கிளப்களில் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுப்பதற்காக சாலை மற்றும் புறப்பகுதிகளில் 300 க்கும் அதிகமான இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *