சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

சொந்த வீட்டில் 550 சவரன் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40). இவர் தொழிலதிபராக இருக்கிறார். இவரது தம்பி ராஜேஷ் (37) இருவருமே தங்கள் மனைவி, குழந்தைகள் & தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இருவருமே பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பிவந்து தனது பீரோவில் இருந்த 300 சவரன் நகையை தேடியுள்ளார். அப்போது நகை அங்கு இல்லை. இதைதொடர்ந்து ராஜேஷ் மனைவியின் 200 சவரன் நகையும், 5 தங்கக் கட்டிகளும் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், 550 சவரன் நகையை திருடி சேகர், தனது காதலி சுவாதிக்கு கொடுத்தது தெரியவந்தது. 22வயதான ஸ்வாதியுடன் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று வந்த நிலையில் வெளியூர் சென்றும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த பழக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நகையை கொடுத்தது மட்டுமல்லாமல் ₹30 லட்சம் வரை செலவு செய்துள்ளார், சேகர். மேலும், கார் ஒன்றும் வாங்கிக்கொடுத்துள்ளார். போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு காரை கைப்பற்றியுள்ளனர். நகைகள் எங்கே இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *