தமிழகத்தில் வளமையான ஆட்சி அமைய.. அமைத்திடுக்க திமுகவை ஆட்சியில் அமர.. தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அளித்த வீடியோ விருந்து

தமிழகத்தில் வளமையான ஆட்சி அமைய.. அமைத்திடுக்க திமுகவை ஆட்சியில் அமர.. தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அளித்த வீடியோ விருந்து

எனது பிறந்தநாள் கொண்டாட்டமாக இல்லாமல் பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை :

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரின் கழக உடன் பிறப்புகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட வேண்டியதில்லை என்று தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ‘என்னுடைய பிறந்தநாள் செய்தி ‘ என்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

அதில், நான் அனைவரும் ஒன்று சேர்ந்து வளமான தமிழகத்தை அமைத்திடவேண்டும் அதற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் திமுகவை வெற்றி பெற செய்து ஆட்சியில் அமர செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

Read more – மீண்டும் மீண்டும் உயரும் கேஸ் சிலிண்டர் விலை… மாறுமா இந்த அவலநிலை.. ஒரு நாளில் ரூ. 25 அதிகரிப்பு

மேலும், ஊழல் செய்யும் இந்த ஆட்சியை தூக்கி எறிந்து மக்கள் விரும்பும் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக அடுத்தவர்களுக்கு பயனுள்ளதை செய்யுங்கள் என்று தொண்டர்களை கேட்டு கொண்டார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *