Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை – மாணிக்கம் தாகூர்

July 31, 2026

தேவையின்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் திரு. அன்புமணி, ‘ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை வரும், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டிற்கு எதிரானது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்று சொல்வாரா? அப்படி சொன்னால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு – கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமையும், பொறுப்பும் ஆகும். இந்த ஆண்டு மழை பொய்த்ததால், காவிரியில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. இந்நிலையில், ‘தமிழ்நாட்டிற்கு, தினமும் 3,500 கன அடி வீதம், அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்” என, கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரு மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, செயல்படுத்த வைக்க வேண்டியது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கடமை. ஆனால் அந்த கடமையிலிருந்து பிரதமர் மோடி தவறுகிறார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் குற்றச்சாட்டு. நாம் அனைவரும் இதைத்தான் கண்டிக்க வேண்டும்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

பாமக தலைவர் திரு. அன்புமணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார். பிரதமர் மோடியை எளிதில் அணுகக்கூடிய நிலையிலும் இருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேசி, காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கு மாறாக, தேவையில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை வம்புக்கு இழுப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. அவர் பிரதமர் ஆனதும் இந்த கோரிக்கையை அன்புமணி வைக்கலாம்.

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் நியாயத்திற்காக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று, தமிழ்நாட்டின் குரலை உரக்க வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. எனவே, அன்புமணி அவர்கள் இதில் அரசியலை தவிர்த்து, மத்திய பாஜக அரசில் அவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ISI முத்திரை இல்லாத பொருட்கள் – ₹.2 லட்சம் அபராதம்

Next Post

விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!

Next Post

விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version