3 நாட்கள் சட்டசபை கூட்டம்- அலுவல் ஆய்வு குழு முடிவு

3 நாட்கள் சட்டசபை கூட்டம்- அலுவல் ஆய்வு குழு முடிவு
சட்டசபை நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது.

கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை நடத்தாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3 ம் தளம் பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும், என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

சபாநாயகர் ப.தனபால் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதாவது செப்டம்பர் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சட்டசபை கூட்டத்தொடருக்கு 72 மணி நேரத்துக்கு முன் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *