நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும்-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும்-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உறுதுணை
நிவர் புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், தி.மு.க. நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வழங்குவதற்கும் தி.மு.க. நிர்வாகிகள் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு
புயல், மழை பாதிப்புப் பகுதிகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து, அவர்கள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். வடகிழக்குப் பருவமழை முற்றுப் பெறும்வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *