நிவர் புயல் காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைப்பு
நிவர் புயல் காரணமாக சான்றிதழ் தட்டச்சர் பணிக்கான சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சான்றிதழ் தட்டச்சர் பணிக்கான சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-IV (குரூப்-4 தேர்வு) 2018-2019 மற்றும் 2019-2020-ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 02.11.2020 முதல் 26.11.2020 வரை மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

ஒத்திவைப்பு
இந்த நிலையில், ‘நிவர் புயல்’ காரணமாக 25.11.2020 மற்றும் 26.11.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 8.12.2020 மற்றும் 9.12.2020 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விண்ணப்பதாரர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் தனியே தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *