மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது- பள்ளிக்கல்வி துறை

மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது- பள்ளிக்கல்வி துறை
நீட் தேர்வில் மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 13 ம் தேதி நடைபெற்றது.720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் நாடு முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதினர்.
நீட் தேர்வில் இடம்பெற்ற உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 97 சதவீத வினாக்கள் மாநில அரசின் புதிய பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 90 வினாக்களில் 87 வினாக்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேதியியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 43 வினாக்களும், இயற்பியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 44 வினாக்களும் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2018-2019ம் ஆண்டு 11ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும், 2019-2020ம் கல்வியாண்டில் 12ம் வகுப்புக்கான பாடப்புத்தகமும் புதியதாக வெளியிடப்பட்டது.

CBSE பாடத்திட்டத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டிருந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள் இந்த முறை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், செப்டம்பர் இறுதியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *