Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

குணசேகரனை தொடர்ந்து தற்போது NEWS18 சேனலில் இருந்து நெறியாளர் செந்திலும் வெளியேற உள்ளார்!!

August 15, 2020
News18 நிறுவனம் கண்ணியமாக மரியாதையுடனே எனக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மக்களுக்கான குரல் அங்கு இல்லாத காரணத்தால் நான் அங்கு பணியாற்ற விரும்பவில்லை. எனவே அதிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.

 மேலும் அவர் விடுத்துள்ள  முழு அறிக்கை பின்வருமாறு

திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன்.ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாக போராடி என் படிப்பை தொடர்ந்தேன், ஊடகத்திலும் இணைந்தேன்.

யூடியூபர் மாரிதாஸ் வீட்டில் ரெய்டு.. கூட்டமாக குவிந்த பாஜக உறுப்பினர்கள்

விடைபெறுகிறேன், நன்றி! நியூஸ் 18 ல் இருந்து விலகினார் குணசேகரன்

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

ரூ.8000 சம்பளத்தில் ஆரம்பித்து இன்று பல லட்சங்கள் வரை சம்பாதிக்கிறேன். சத்தியம் டிவியில் பணியாற்றியபோது பொங்கல் பண்டிகை அன்று பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய சேனல்களுக்கு மத்தியில் திருநங்கைகளை வைத்து நான் நிகழ்ச்சி நடத்தினேன். ஏனென்றால் ஆரம்பம் முதலே நான் குரலற்றவர்களின் குரலாக இருப்பதில் பேரார்வம் கொண்டவன். அதற்கு அடிப்படை காரணம் நான் கடந்து வந்த பாதை.

கூடன்குளம் அணு உலைக்கு எதிராக மக்களோடு கைகோர்த்து குரல் கொடுத்தேன். கதிரா மங்கலத்திற்கு எதிரான சாமானியர்களின் போராட்டத்தில் பங்குபெற்றேன். சென்னை பெருவெள்ளம் வந்தபோது முழுக்க நான் ஊடகத்திலேயே இருந்துதான் மக்களுக்கான குரல்களை நாட்டிற்கு ஒளித்துவந்தேன். அன்றைய தினம் என் மனைவி, பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதுகூட தெரியாது. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்த எனது மொத்த வீடும் மழைநீரால் நிரம்பியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது.

பல ஊடக நண்பர்களோடு இணைந்து போராட்டத்தில் மரணித்த மக்களுக்காக.. கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய நிகழ்வின்போது சுமார் 2,500 பேர் திரண்ட மக்களில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இரவு பகலாக போதிய தூக்கமின்றி மக்களின் போராட்ட குணத்தை அரசாங்கத்திற்கு உணர்த்த பெரும்பாடுபட்டேன். இன்னும் ஏராளம் ஏராளம்..

இதையெல்லாம் நான் இங்கு பெருமைக்காக பதிவு செய்யவில்லை. இதை இங்கே நான் சொல்லக்காரணம்.. மக்களுக்காக குரல் கொடுத்த என் மீது என்ன தவறு? அதற்காக ஏன் என்னை எதிர்க்கிறீர்கள்?

நான் உள்ளிட்ட எந்த நெறியாளரும் எந்த விவாத மேடைகளிலும் கொச்சையான இழிவான வார்த்தைகளை உபயோகித்ததில்லை. எங்கள் கருத்திற்கு பதிலளியுங்கள் அல்லது எதிர்கருத்து கூறுங்கள். ஆனால் குரல்வளையை நெறிப்பது எந்த விதத்தில் நியாயம்?நான் போடும் பந்தை துணிவிருந்தால் சிக்ஸ், ஃபோர் என அடியுங்கள், வரவேற்கிறேன். ஆனால் பந்தை அடிக்காமல் பேட்டால் அந்த பவுலரை தாக்குவது இம்மி அளவு கூட நியாயமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் இல்லாதவர்கள்தான் குரல்வளையை நெரிக்கும் வேலையை பார்ப்பார்கள்.

தற்போது News18 சேனலில் காலத்தின் குரல் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு பழ வியாபாரி சமீபகாலமாக உள்ள பிரச்சினைகளை அறிந்து என்னை கண்டு “எங்களுக்ககாக குரல் தரும் உனக்காக நான் நிப்பேன் சார், நீ எதற்கும் பயப்படாத” என சென்னை தமிழில் எனக்கு ஆறுதல் தருகிறார். நெல்லையில் இருந்து என் கிராம மக்கள் “எலேய் மக்கா! உனக்காக நாங்க இருக்கோம்ல” என ஊக்கப்படுத்துகிறார். இந்த மக்களுக்கு நான் எப்படி துரோகம் செய்வேன்??

இப்போதும் நான் நினைத்தால் என் பணியை தொடர்ந்து லட்சங்களை சம்பாதிப்பேன், கார் வாங்குவேன், இஷ்டப்பட்டதை உண்பேன். ஆனால் எதுவுமே எனக்கு ஒட்டாது. உண்டாலும் செரிக்காது. ஏற்கனவே கூறியபடி குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன்.

என் பணியை தொடரலாம் என கட்சி சார்ந்த ஊடகத்திலும் பணியாற்ற விரும்பவில்லை. ஏனெனில், அனைத்து தரப்பினரின் தவறை அங்கு சுட்டிக்காட்ட முடியாது. கலைஞர் டிவி, ஜெயா டிவி போன்ற ஊடகத்திடம் இருந்து ஆரம்பத்திலேயே அழைப்பு வந்தும் அதை நிராகரித்துவிட்டேன்.

எனது பணி போவதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஊடகமே என்னை ஒதுக்கினாலும்கூட ATM வாசலில் வாட்ச்மேன் வேலைபார்த்து மீதமுள்ள நேரத்தில் மக்களுக்கான ஆதரவு குரல் தருவேன்.இருப்பினும் இப்போதைய சூழ்நிலையில் யாருக்கும் பணிந்துபோகாமல் உண்மையை உரக்கச்சொல்ல ஒரு வழி இருக்கிறது என்றால் அது ‘யூடியூப் சேனல்’ மட்டும்தான். அதில் எனது பணியை தொடரலாம் என முடிவெடுத்து “தமிழ் கேள்வி” எனும் சேனல் உருவாக்கியுள்ளேன். இதற்கு மக்களான உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும். அதேசமயம் இதில் நான் பிழைசெய்தால் என் தலையில் நீங்கள் கொட்டவேண்டும்.இதில் அரசியல், அதிகார வர்க்கம் மூலம் என்னை யாராலும் மிரட்டவோ, அடிபணியவோ செய்ய முடியாது. அதற்கு அச்சப்படும் ஆளும் நானல்ல. என்மீது அக்கறை கொண்டு என்னை விசாரித்த அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.என பதிவிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நான் என்னைக்கும் தல வழிதான்.. ரெய்னா கொடுத்த ஷாக்

Next Post

நிஜ மெர்சல் ஹீரோவும், ஏழைகளுக்கான மருத்துவரான வட சென்னை திருவேங்கடம் காலமானார்

Next Post
நிஜ மெர்சல் ஹீரோவும், ஏழைகளுக்கான மருத்துவரான வட சென்னை திருவேங்கடம் காலமானார்

நிஜ மெர்சல் ஹீரோவும், ஏழைகளுக்கான மருத்துவரான வட சென்னை திருவேங்கடம் காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version