நியாயவிலை கடைகளுக்கு மாதத்தில் 3 வது சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு

நியாயவிலை கடைகளுக்கு மாதத்தில் 3 வது சனிக்கிழமை விடுமுறை- தமிழக அரசு
செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை நியாயவிலை கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நியாயவிலை அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாயவிலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். நியாயவிலை கடையின் விடுமுறை நாட்களான கடந்த மாதங்களில் ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் பணியாற்றினர்.

எனவே விடுமுறை நாளிலும் நியாயவிலை கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதிலாக இந்த மாதம் 19 ம் தேதி, வரும் அக்டோபர் 17ம் தேதி, நவம்பர் 21ம் தேதி ஆகிய நாட்கள் ( சனிக்கிழமை) நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *