Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சாதனை : Marvel Educare-ல் பயின்ற எஸ்.சஞ்சனா என்ற மாணவி அசத்தல்

October 16, 2020
இன்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் Marvel Educare-ல் பயின்ற மாணவி எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இதை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான http://ntaneet.nic.in/ இல் பார்க்கலாம். கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன்படி நீட் தேர்வு மீண்டும் 14ம் தேதி நடைபெற்றது ஏற்கனவே தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. தேர்வை தவறவிட்ட மாணவ மாணவியர் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த தேர்வை எழுதினர். சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர்.

நீட் தேர்வில் தோல்வி அச்சம்: கோவையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர்களை ஒன்று திரட்டும் ஸ்டாலின்… தீயாய் வேலை செய்யும் திருச்சி சிவா!

இந்த மருத்துவ படிப்புகளுக்கெல்லாம் நீட் நுழைவுத் தேர்வை தள்ளிவைக்கிறோம்- மத்திய அரசு தகவல்!!

இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. எப்போது வேண்டுமானாலும் முடிவுகள் வெளியாகலாம். தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும், http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வு முகமை தெரிவித்தது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. Marvel Educare-ல் பயின்ற மாணவி எஸ்.சஞ்சனா 680 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இது குறித்து சஞ்சனா கூறியதாவது,

“ நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. கே.கே நகர் PSBB பள்ளியில் படிக்கும் போதே அதற்கான திட்டமிடலுடன் படித்தேன். அதற்கேற்ப Marvel Educare-ன் நீட் ரேங்க் பூஸ்டர் ப்ரோகிராம் மூலம் படித்தேன். அங்கு எனக்கு கொடுத்த சரியான பயிற்சி எனக்கான வெற்றியை தேடி தந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியதோடு மட்டுமில்லாமல், திறமையை நம்பி பயிற்சியளித்த அகிலன் சாருக்கு நன்றி” என கூறினார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சஞ்சனா சாதனை படைத்ததை தொடர்ந்து Marvel Educare-ன் நிறுவனர் CP அகிலன் கூறுகையில்,

“சஞ்சனா ஆர்வமாக படிக்கக் கூடியவர். மருத்துவக்கனவை நோக்கிய அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. நீட் தேர்வை எதிர்கொள்ள கொடுத்த எல்லா பயிற்சி வகுப்புகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டு, தேர்வு நடைமுறைகளை பற்றி தெரிந்துக் கொண்டார். தொடர்ச்சியாக தேர்வு எழுதி பழகியதன் மூலம், நீட் தேர்வில் நிச்சயம் வெல்வார் என நினைத்திருந்தேன். அதன்படி இப்போது வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரியான பாதையை அமைத்து கொடுக்கும் முயற்சிக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாக”, Marvel Educare நிறுவனர் CP அகிலன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆறு வருடங்களாக சி.பி.எஸ்.இ தேர்வில் 490 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை அகிலன் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.
பல பயிற்சி வகுப்புகளில் அதிகப்படியான கட்டணம் காரணமாக, திறமையான மாணவர்களுக்கு சரியான பயிற்சி என்பது எட்டாக் கனியாக உள்ளது. ஆனால், நம் அகிலன் இன்ஸ்டிட்யூட், திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நற்செயலையும் செய்து வருகிறது. இதன்முலம், 1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து பயன் பெற்று இருக்கிறார்கள். இந்நிலையில், மருத்துவம் பயிலும் கனவுக்கு பெரும் அச்சுறுத்தலாக நீட் தேர்வு உருவெடுத்துள்ளது. அந்த அச்ச உணர்வில் இருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வந்து, அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் நம் அகிலன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு Marvel Educare என்னும் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறது. இங்கு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. முதலாமாண்டு பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும், நீட் தேர்வில் வெற்றி பெற்று ஸ்டான்லி உள்ளிட்ட தரமான மருத்துவமனையில் மருத்துவ படிப்பை தொடங்கியுள்ளனர்” எனவும் அகிலன் கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மோடியின் கனவுக்கு வந்த சோதனை!!.. தவிக்கும் டிஜிட்டல் இந்தியா

Next Post

இந்திய குத்துச்சண்டை வீராங்கனைக்கு கொரோனா…

Next Post

இந்திய குத்துச்சண்டை வீராங்கனைக்கு கொரோனா...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version