தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா ? கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை..

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா ? கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை..

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாள் மட்டுமே தமிழகத்தில் வரலாறு காணாத அளவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்தநிலையில் இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு முதல் சுகாதாரத்துறை வரை விழிபிதுங்கி உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே 10 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 12 ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 15.04.2021!!!

இதனையடுத்து தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 12 ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். ஏற்கனவே, தமிழக அரசால் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *