பள்ளிகள் திறப்பு.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..!!

பள்ளிகள் திறப்பு.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் உள்ள நிலையிலும், தற்போது நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை சற்று ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. எனவே, 3வது அலையை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது.

செப்.,1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, கொரோனா பரவலை தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே,1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பித்திருக்கிறார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதிநாட்களில் கோவில்களுக்கு சென்று வழிபட விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேவேளையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் கோவை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *