பிரதமரை சந்திக்க செல்கிறார் தமிழக முதல்வர்

பிரதமரை சந்திக்க செல்கிறார் தமிழக முதல்வர்

இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

வரும் 18-ம் தேதியன்று முதல்வர் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களையும் முதல்வர் சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருடன் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோரும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பானது அரசியல் ரீதியாகவும், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கான நிலுவைத் தொகையை கேட்டு பெறவும் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் முதல்வர் டெல்லி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *