புதிய கல்விக்கொள்கை தொடர்பான கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதிய கல்விக்கொள்கை தொடர்பான கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
புதிய கல்விக்கொள்கை தொடர்பான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பதில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கையை அனுமதிக்காது என முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. புதிய கல்விக் கொள்கையின் தீய விளைவுகளை எதிர்த்து குரல் கொடுத்த தமிழக மக்களின் உணர்களுக்கு மதிப்பளித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும், தமிழ்நாடு அரசு இருமொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என அறிவித்திருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறியுள்ள மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு ஏற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி, அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொள்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *