சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் –  ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணம். சென்னை கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *