மனைவியை கேலி செய்த இளைஞர் தலை துண்டித்து கொலை

மனைவியை கேலி செய்த இளைஞர் தலை துண்டித்து கொலை

நெல்லை மாவட்டத்தில் மனைவியை கேலி செய்த நபரின் தலையை அறுத்து கொலை செய்திருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாழையூத்தைச் சேர்ந்த சிதம்பர செல்வம் என்பவரும் பாலாஜி என்பவரும் உறவினர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்போது சிதம்பரம் செல்வம் அண்மையில் பாலாஜியின் மனைவி பற்றி தரக்குறைவாக பேசியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் பாலாஜி, அவரது தம்பி ராமையா, சிதம்பரம் செல்வம் மற்றும் 2 நண்பர்களுடன் சேர்ந்து அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் மது அருந்தி இருக்கின்றனர். அப்போதும் சிதம்பர செல்வம் பாலாஜியின் மனைவி பற்றி அவதூறாக பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜியும், ராமையாவும், சிதம்பர செல்வத்தை அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். இருந்தும் ஆத்திரம் தீராமல் அவரது கழுத்தை அறுத்து எடுத்துள்ளனர். போதை தெளிந்த பிறகு வெட்டப்பட்ட தலையுடன் தாழையூத்து காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *