மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம்!

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஞ்செய்தியை அனுப்பி வருகிறது. மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம். 2.66 கோடி நுகர்வோரில் 11 மணி நிலவரப்படி இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *