Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

திறன் மீது நம்பிக்கை இருந்தாலே போதும் நடைக்கு இனி தடை இல்லை…

September 19, 2020
உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் திருநங்கைகள் தனித்து விடப்பட்டாலும்,நமக்கு முன்னோடியாய் தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைகளுக்கென பசுமை வீடுகள் கட்டி புது வாழ்வாதாரத்தை அமைத்து கொடுத்து இருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு… தமிழ்நாடு அரசுக்கு பறந்த உத்தரவு!

காணாமல் போன இளம்பெண் திருநம்பியாக கண்டுபிடிப்பு!!

3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 85 திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வேண்டும் என இந்தியாவின் முதல் திருநங்கை பொறியாளரும், சமூகசெயற்பாட்டாளருமான கிரேஸ்பானு தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து ஆட்சியரின் வழிகாட்டுதலில்,30 பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டது.மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாட்டு தொழுவம் அமைத்து கறவை மாடுகள் வாங்க கடன் உதவி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.இவர்களின் வாழ்க்கை தரம் உயர அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நகருக்கு அவர் பெயரையே சூட்டப்பட்டுள்ளது.

பால்பண்ணை :

இந்தியாவில் திருநங்கைகளுக்கென பிரதியேக கூட்டுறவு பால் பண்ணை முதல் முறையாக சந்தீப் நந்தூரி நகரில் இயங்குகிறது .இதில் முதல் கட்டமாக தலா ஒருவருக்கு ஒரு கறவை மாடு வாங்கி இங்கு கறக்கும் பாலை விற்பனை செய்ய ஏதுவாக, மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை புதியதாக தொடங்கினோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 லிட்டர் பாலை ஆவின் பால் நிலையத்துக்கு வழங்கி வருகிறார்கள்.மேலும் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.5 ஏக்கர் நிலத்தில் வீடு, மாட்டு தொழுவம் ஒன்றரை ஏக்கரில் அமைத்தது போக மீதமுள்ள ஒரு ஏக்கரில் தையல், கணினி பயிற்சி அமைத்து தருமாறு கேட்டுவருகின்றனர். இது அவர்களின் திறமையை மட்டும் அல்லாது வாழ்க்கையின் மேம்பாட்டையும் உயர்த்த உதவும்.

இதே போல் இங்கு வசித்துவரும் 30 திருநங்கைகளில் 3 பேர் காவலர் தேர்வுக்கு படித்து வருகின்றனர் .மேலும் 6 பட்டதாரிகள் உள்ளதால், அனைவருக்கும் படிப்புக்கு தகுந்த அரசு வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்தால் இவர்களின் சமூகம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் உயர்ந்துவிடும்.

கோயம்புத்தூர் :
“கோவை டிரான்ஸ் கிச்சன்”

கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கியுள்ளனர்.

இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே இந்த உணவகம் இயங்கிவருகிறது . தற்போது 10 பேர் ஒன்றாக இணைந்து இதை ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு U.W.C ஸ்வஸ்தி மற்றும் சி.எஸ்.ஐ, அப்பாசாமி கல்லூரியினர் உதவி செய்தும்,இந்த திருநங்கை 10 பேருக்கு எப்படி உணவகம் கையாள்வது என்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது 10 பேரால் இயங்கி வரும் இந்த உணவகமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இன்னும் 6 மாதங்களில் மற்றொரு கிளை ஆரம்பிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படம்

கொரோனா பரவல் காரணமாக திருநங்கை சமூக உறுப்பினர்கள் பலர் வேலை இழந்ததால், வேறொரு வேலைகளை தற்போதுள்ள சூழலில் தேடி கிடைக்க வாய்ப்பில்லை எனவே அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க கோயம்புத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் சங்கீதா ஏற்பாடு செய்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக கேன்டீனை சங்கீதா நடத்தி வருவதால், சமையல் வேலை அவர்களுக்கு முதன்மை தொழிலாக மாறிவிட்டது . எனவே, யாரையும் எதிர் பார்க்காமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய உணவகத்தை திறந்து உள்ளனர்.இதில் உணவு தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் டெலிவரி வரை அவர்களே முன் நின்று உணவகத்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தூத்துக்குடி: சூடு பிடிக்கும் தேர்தல் களம்..வேகம் காட்டும் திமுக

Next Post

மீண்டும் ஒரு முந்தானை முடிச்சு

Next Post

மீண்டும் ஒரு முந்தானை முடிச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version