மிக பெரிய வெற்றி பெறுவேன், வெற்றியை மோடியின் கையில் தருவேன் : குஷ்பு பேட்டி

மிக பெரிய வெற்றி பெறுவேன், வெற்றியை மோடியின் கையில் தருவேன் : குஷ்பு பேட்டி

ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமர் மோடி கைகளில் சமர்ப்பிப்பேன் என நடிகை குஷ்பூ பேட்டியளித்துள்ளார்.

சென்னை :

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது ;

ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்று, அதனை பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து இந்த வெற்றியை அவர்களது கைகளில் சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Read more – சத்தமில்லாமல் அரங்கேறிய கூட்டணி… அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகளா ?

மேலும், மாநில தலைவர் எல்.முருகனின் உதவியும் பெரிய அளவில் இருந்ததாகவும், நிச்சயமாக பொதுமக்கள் வாக்களிக்கும் போது, எனது முகம் மட்டும் அல்ல அதற்கு பின்னால் தாமரையையும் பார்த்து வாக்களித்து ஜெயிக்கவைப்பார்கள். இன்று முதல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *