வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்த பாஜக வெற்றி வேட்பாளர் குஷ்பு…

வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்த பாஜக வெற்றி வேட்பாளர் குஷ்பு…

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு திறந்தவெளி வாகனம் இருந்தபோதும் நடந்தேசென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சட்டமன்ற தேர்தலில் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காலை மாலை என வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பொதுமக்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று தான் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோடம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய டிரஸ்ட்புரம் 1வது தெருவில் இருந்து 10 தெரு வரை பாஜக வேட்பாளர் குஷ்பு வீதி வீதியாக நடந்தே சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பாஜக சார்பில் திறந்தவெளி வாகனம் இருந்தபோதும் நடந்து சென்ற குஷ்புவை அக்கட்சியின் தொண்டர்கள் வாகனத்தின் பயணிக்கும் படி வலியுறுத்தினர். என் தொகுதி மக்களை பார்க்க நான் நடந்து சென்றே வாக்கு சேகரித்து கொள்கிறேன் என் குஷ்பூ சொன்ன வார்த்தை, பொதுமக்களின்றி தொண்டர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாக சென்ற கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *