ஸ்டாலின் முதலமைச்சராக திமுக வேட்பாளர்கள் பீகாரில் இருந்து வரவேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலின் முதலமைச்சராக திமுக வேட்பாளர்கள் பீகாரில் இருந்து வரவேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலினை முதல்வராக்க திமுக வேட்பாளர்கள் பீகார் மாநிலத்தில் இருந்துதான் வர வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

மதுரை விரகனூர் வைகை தடுப்பணையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கால்வாயில் நீர் திறப்பதற்காக அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி இன்று மதுரைக்கு வந்தார்.

நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றால் திமுக வேட்பாளர்கள் பீகாரில் இருந்து வரவேண்டும். திமுகவுக்கு ஆலோசனை வழங்கிவரும் ஐபேக் நிறுவனத்தை தமிழக மக்கள் கோ பேக் என்று சொல்லிவிட்டார்கள். அண்ணா, கலைஞர் காலத்தில் சீட்டு கேட்டு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் தற்போது பிரசாந்த் கிஷோர் சந்திக்க பீகாருக்கு செல்கிறார்கள்.

Read more : பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு மூச்சுதிணறல்

சசிகலா வெளியே வரும் நிலையில் முதல்வர் தன்னை பாதுகாத்து கொள்ள பிரதமரை சந்தித்துள்ளார் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். டெல்லிக்கு சென்று எங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை என்று அமைச்சர் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *