உங்களுக்கு சமைக்க தெரியுமா ? எதார்த்தமாக கடுகு போட்ட செய்தியாளர்.. எம்.பி. கனிமொழி வாயிலேயே வறுத்தெடுத்த மொமண்ட்..

உங்களுக்கு சமைக்க தெரியுமா ? எதார்த்தமாக கடுகு போட்ட செய்தியாளர்.. எம்.பி. கனிமொழி வாயிலேயே வறுத்தெடுத்த மொமண்ட்..

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை :

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

ஆளும் கட்சிகள் முதல் எதிர் கட்சிகள் வரை தொடர் பிரச்சாரம் மற்றும் நல்ல திட்டங்கள் அறிமுகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் தங்களது ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.

Read more – இன்றைய ராசிபலன் 15.02.2021!!!

இந்த கேள்வியால் கடுப்பான திமுக எம்பி கனிமொழி, இந்த கேள்விகளை ஏன் ஆண்களை பார்த்து கேட்பதில்லை என்று விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அவர்களைப் பார்த்து ஏன் இந்த கேள்வி கேட்பதில்லை? என் தந்தையும் ஒரு காலத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் தான். அவரிடமும் ஏன் இந்த கேள்வி கேட்டவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *