அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் எடிஷன் அறிமுகம்!

அமேசான் நிறுவனம் ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷனை ரூ. 89 என குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் மொபைல் ஒன்லி சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE- டெக்னோ மொபைல்ஸ்ஸின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்!

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஎஸ்ஓ தளங்களில் புதிய அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் எடிஷன் சேவை எஸ்டி தர வீடியோ ஸ்ட்ரீமிங் வசதியை வழங்குகிறது. இந்தியாவில் மட்டும் அறிமுகமாகும் இந்த சேவை நெட்ஃபிலிக்ஸ் மொபைல் சலுகைக்கு போட்டியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனை செயல்படுத்த அமேசான் நிறுவனம் ஏர்டெல்லுடன் இணைந்துள்ளது. ஏர்டெல் பயனர்கள் அமேசான் தேங்க்ஸ் செயலி வாயிலாக  சைன் இன் செய்தவால் 30 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் சேவை இலவசம் என்பது உறுதி. இந்த ரூ. 89 சேவை 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 6ஜிபி டேட்டாவும் வழங்குகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *