கூகுளின் முக்கிய செயல்பாடு நிறுத்தபடுமா?

கூகுளின் முக்கிய செயல்பாடு நிறுத்தபடுமா?

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அனைத்து வித தகவல்களையும் தெரிந்து கொள்ள பயன்படுத்தும் கூகுள் தேடுபொறி தற்போது அனைவருடைய வாழ்விலும் அவசியமாகிவிட்டது. அதேபோல் கூகுளில் பல்வேறு தனிப்பட்ட செயல்பாடுகளும் உள்ளது. அதில் ஒன்றுதான் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Google now launcher. இந்த google now செயல்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ios மொபைல்களில் செயல்படும் கூகுளின் தேடல் அம்சமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த செயல்பாடு குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதில் google now செயல்பாடு தொடர்ந்து செயல்படாது எனவும் இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக நிறுத்தப்படும் எனவும் கூகுளின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *