அதிருப்தியில் ஐ-ஃபோன் 12 சீரிஸ் பயனாளர்கள்!

அதிருப்தியில் ஐ-ஃபோன் 12 சீரிஸ் பயனாளர்கள்!

ஐஃபோன் 12 சீரிஸ் குறித்து பல விஷயங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் ஐ-போன் 12 சீரிஸ் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்தன.

இந்த சீரிஸ்ஸில் ஐபோன் 12 மினி, ஐபோன் 12 உள்ளிட்டவை இதில் அறிமுகமாகி இருந்தன. வழக்கமாக ஐபோன்களின் விமர்சனம் பாசிட்டிவாக வரும் வேளையில் தற்போது விமர்சனத்தை விட வாடிக்கையாளர்களிடம் அதிகம் அதிருப்தியே எழுந்துள்ளது.

அதில் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கருதப்படுவது, மொபைலின் சார்ஜ் சீக்கிரமாக இறங்குவதுதான். இண்டர்நெட், வைஃபை பயன்பாடு போன்றவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் கூட மொபைலின் சார்ஜ் பயன்பாடு விரைவில் தீர்ந்து விடுவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

READ ALSO- புதிய சாதனை படைத்த FAU-G!

இதற்கு காரணமாக, iOS-ன் செயல்பாடுதான் எனவும், இதன் குறைபாடு விரைவில் iOS 14 ல் சரி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து இன்னும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *