itel Vision 1 எனும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமான சில நிமிடங்களிகேயே விற்று தீர்ந்து பட்டையை கிளப்பியுள்ளது.
பல சிறப்பு அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள இந்த தொலைபேசிக்கு, மலிவான விலையாக ரூ .6,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செல்போன், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்ததால் சில நிமிடங்களிலேயே அதன் விற்பனை நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பாக Itel நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “பிளிப்கார்ட்டில் முதல் விற்பனையில் 10 நிமிடங்களுக்குள் #itelkavision ‘விற்றுவிட்டது’ என்று பகிர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். விஷன் 1 (3 ஜிபி) க்கு அன்பையும் ஆதரவையும் வழங்கியதற்கு நன்றி.” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த செல்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 4000 mAh பேட்டரி மற்றும் அதன் தோற்றம் கருதப்படுகிறது. 6.09 இன்ச் HD + IPS டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த செல்போன், 720×1560 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. இதன் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பில் வருகிறது. வடிவமைப்பு 19.5: 9 என்ற அளவுகளை கொண்டதாகும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த மாடல், ஆக்டா கோர் Unisoc SC9863A ப்ராசசர் உள்ளது. மேலும், மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் அதன் மெமரியை 128 ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
கேமராவைப் பற்றி பேசுகையில், பிரைமரியாக இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் LED flash உடன், 8 மெகாபிக்சல் முதன்மை மற்றும் 0.08 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. தொலைபேசியில் செல்ஃபி எடுக்க 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
பவரைப் பொறுத்தவரை, 4000 mAh பேட்டரி ஐடெல் விஷன் 1 இல் வழங்கப்படுகிறது. இணைப்பிற்காக, தொலைபேசியில் 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, 3.5 மிமீ headphone jack-உடன் இன்னும் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்ததொலைபேசியை கிரேடேஷன் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பச்சை நிறத்தில் வாங்கலாம். பின்புறமாக பொருத்தப்பட்ட finger print சென்சார் மற்றும் Face Unlock அம்சத்தையும் கொண்டுள்ளது.