உலகில் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன்களின் தேவை அதிகரித்து கொண்டு வரும் சூழ்நிலையில்,அதற்கு ஏற்றவாறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன,மொபைல் வங்கி பணம் திருட்டு, இ-மெயில் பாஸ்வர்ட் திருட்டு போன்ற குற்றங்கள் பெருகிவருகின்றன.

இதனால் மொபைல் நிறுவனங்கள் சைபர்செக்யூரிட்டி கொண்ட போன்களை வடிவமைத்து வருகின்றன. தற்சமயம் குவால்காம் சிப்செட்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செக்பாயிண்ட் தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
புதிய பாதுகாப்பு குறைபாட்டை குவால்காம் ஆச்சிலீஸ் என அழைக்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் 40 சதவீத மாடல்களில் குவால்காம் பிராசஸர் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இந்த பாதுகாப்பு குறைபாடு உலகம் முழுக்க மொபைல் சாதனங்களை பயன்படுத்துவோரில் 40 சதவீத பேரை பாதித்து இருக்கலாம் என தெரிய வருகிறது.
இந்த குறைபாடு காரணமாக மொபைல் சாதனங்களில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் இன்ஸ்டால் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குவால்காம் சிப்களில் உள்ள 400 வரி கோட்களை யார் கண்டறிந்தாலும், ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

இந்த கோட்களை இயக்கும் உரிமை கொண்டவர்களால், அழைப்புகளை பதிவு செய்ய முடியும். மேலும் ஸ்மார்ட்போன்களில் இருந்து விவரங்களை திருடவும், செயலிகளை இன்ஸ்டால் செய்யவும், சாதனத்தை நிரந்திரமாக பிளாக் செய்யவும் முடியுமாம். இந்த குறைபாடு பற்றிய விவரங்கள் ஏற்கனவே குவால்காம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டதாம்.
அந்த வகையில் இதனை சரி செய்யும் பணிகளில் குவால்காம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறதாம். கூடிய விரைவில் இதனை சரி செய்வதற்கான அப்டேட்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




