கடந்த 72 மணி நேரத்தில் அதிக அளவில் டெலிகிராம் செயலியை பயனர்கள் டவுன்லோட் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வாட்ஸப் பிரைவசி விஷயம் உலக அளவில் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தற்போது டெலிகிராம் அதிக அளவில் டவுன்லோட் செய்துள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் டெலிகிராம்மை இன்ஸ்டால் செய்துள்ளனர். இந்த தகவலை டெலிகிராம் தலைமை அதிகாரியான பேவல் டுரோவ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
உலகளவில் டெலிகிராமின் மாதாந்திர பயனாளர்களின் எண்ணிக்கை 50 கோடி எனவும் இதில் ஆசியாவில் மட்டும் 27 சதவீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ஆய்வில் இந்த மாதத்தில் 6-10 வரைக்கும் சுமார் 23 லட்சம் இந்தியர்கள் சிக்னல் செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.
READ MORE- சோனியின் குட்டி ட்ரோன் அறிமுகம்!
அதே சமயம் 16 லட்சம் பேர் டெலிகிராமை டவுன்லோட் செய்துள்ளனர். இதே சமயத்தில் வாட்ஸப் இன்ஸ்டால் செய்தவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




