யூடியூபில் 9 வயது பையனின் ஆண்டு வருமானம் ரூ.219 கோடி

யூடியூபில் 9 வயது பையனின் ஆண்டு வருமானம் ரூ.219 கோடி

யூடியூபில் 9 வயது பையனின் ஆண்டு வருமானம் ரூ.219 கோடியை ஈட்டி வருகிறார்.

உலக நாடுகள் முழுவதும் சில வருடங்களாக பலர் யூடியூப் மூலம் வீடியோக்களை பதிவிட்டு சிறுவர் முதல் முதியவர்கள் வரை சம்பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் 2020-ம் வருடம் யூடியூப்பில் அதிகமாக வருமானம் ஈட்டிய நபர்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. 30 மில்லியன் டாலர், அதாவது 219.14 கோடி ரூபாயை ஈட்டி முதல் இடத்தைப் பிடித்து யூடியூப் நட்சத்திரமாக ஜொலிக்கிறான் ரயான் காஜி.

Read more – குழந்தைக்கு விசித்திரமான பெயர் சூட்டிய பெற்றோர் லட்சக்கணக்கில் பரிசு வென்று அசத்தல்

இவனது ‘ராயன்’ஸ் வேர்ல்டு’ சேனலுக்கு 2.77 கோடி சந்தாதாரர்கள். சந்தைக்குப் புதிதாக வரும் பொம்மைகளைப் பற்றி விமர்சனம் செய்வது இவனது முக்கிய நிகழ்ச்சி. இதுவரை 1800 வீடியோக்களை பதிவு செய்திருக்கிறான். ஒவ்வொரு வீடியோவும் கோடிகளில் பார்வைகளை அள்ளும் ரயானின் வயது 9. நான்கு வயதிலிருந்தே யூடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டான் இந்த பில்லினியர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *