நீங்க அப்டேட் பண்ணா மட்டும் போதும்… புதுவித மாற்றங்களுடன் வாட்சப் செயலி?

நீங்க அப்டேட் பண்ணா மட்டும் போதும்… புதுவித மாற்றங்களுடன் வாட்சப் செயலி?
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய மாற்றங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் விரைவில் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. வெகேஷன் மோட், மேம்பட்ட புது UI மற்றும் பல்வேறு அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் புது அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் அப்டேட் மூலம் அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், QR கோட் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டன இது பல பேரை கவர்ந்தது.

அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வெகேஷன் மோட் என்ற அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் ஆர்ச்சிவ் செய்த சாட் பாக்ஸ்களில் புது மெசேஜ்கள் வந்தாலும் அவற்றை Mute செய்ய முடியும். இத்துடன் கால் ஸ்கிரீன் UI மாற்றம் செய்ய்படவுள்ளது.

இதேபோன்று புதிய வாட்ஸ்அப் வால்பேப்பர்கள் வழங்கப்பட இருக்கிறது, இவற்றை பயனர்கள் சாட் பாக்ஸ் பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளலாம். இதை கொண்டு பயனர்கள் வெவ்வேறு சாட் பாக்ஸ்களில் தனித்தனி பேக்கிரவுண்டுகளை செட் செய்து கொள்ளலாம்.

இவற்றுடன் வாட்ஸ்அப் செயலியின் யுசர் இன்டர்ஃபேஸ் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்டோரேஜை எளிதில் மாற்றியமைத்து, தேவையற்ற ஃபைல்களை அவ்வப்போது அழிக்கவும் முடியும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *