சி.ஏ தேர்வு ஒத்திவைப்பு.. மாற்று தேதி அறிவிப்பு

சி.ஏ தேர்வு ஒத்திவைப்பு.. மாற்று தேதி அறிவிப்பு

நாளை(டிச.8) நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டிற்கான சி.ஏ தேர்வு நாளை(டிசம்பர் 8 ஆம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சி.ஏ. பவுண்டேஷனின் தேர்வு தாள் – 1 நடைபெற இருந்தது. இந்நிலையில் இது வருகிற 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும். ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்தி அதே தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *