ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

IRCTC to start Bharat Gaurav Tourist Train on June 21, will cover all Lord  Rama-inspired places | Railways News | Zee News

சிவகங்கை – மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி – மானாமதுரை & குடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே ஆகஸ்டு மாதத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக, ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 31 வரை வியாழக்கிழமை தவிர, ராமேஸ்வரத்தில் காலை 11:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1:30 மணிக்கு (150 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும். மதுரை – ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் சிறப்பு ரயில் (06653) மதியம் 12:30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1:10 மணிக்கு (40 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

திருச்சி – மானாமதுரை, மானாமதுரை – திருச்சி மார்க்கத்தில் செல்லும் முன் பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 4 வரை சிவகங்கை மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் – அம்பாத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 31 வரை செவ்வாய், வெள்ளி,சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலத்தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் புறப்படும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *