வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை… தேர்தல் ஆணையம் விளக்கம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை… தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

Aadhaar-Voter ID link: Election Commission's nationwide drive from today –  Why it is needed? | Zee Business

தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள்  வாக்காளர் அடையாள  அட்டை செல்லாததாகிவிடும் என்று செய்திகள் வருகிறது.

இது தேர்தல் ஆணைய வழிமுறைகளுக்கு எதிராக உள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயருடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கவில்லை. அதேநேரம், வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களின் பெயருடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *