நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்

நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா மருத்துவமனையில் காலமானார்.

தென் ஆப்பிரிக்காவில், இன வெறியை எதிர்த்துப் போராடியவர் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் காலமானார். இவரது மனைவி வின்னி மண்டேலாவும் இன வெறியை எதிர்த்துப் போராடி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் வின்னி காலமானார்.

இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா. இவர் டென்மார்க் நாட்டின் தூதராக இருந்தவர்.59 வயதான இவர் ஜோகனஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *