Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

July 13, 2020

தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இந்திய தேர்தல் ஆணைய தலைமை கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், சட்டத்திற்கு புறம்பாக ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2020’ ஆகியவற்றை மத்திய அரசு  கொண்டுவந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் அரசியலைமைப்பு சரத்துக்களுக்கு எதிரானது.

மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக அரசு போராடி வருகிறது – ஸ்டாலின்

சுதந்திர தின விழாவில் விருதுகள்

தூத்துக்குடியில் கார் தயாரிப்பு ஆலை திறப்பு

இந்த சட்டத்தில் உள்ள திருத்தங்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை வாக்களிக்காத வாக்காளர்கள் பிரிவின் கீழ் கொண்டு வரும் வகையில் உள்ளது. பிரச்னைகள், கிளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் எந்த ஆய்வையும் நடத்தாமல் இந்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. இந்த முடிவு சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தும் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை அழித்துவிடும். வாக்களிக்காத வாக்காளர்கள் முறை என்ற சரத்து போலி வாக்காளர்கள் உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும். புதிய திருத்தங்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவையாற்றுபவர்களை வாக்களிக்காத வாக்காளர்கள் என்ற பட்டியலில் வகைப்படுத்துகிறது.

இந்த 2020 சட்ட திருத்தத்தில் மூத்த குடிமக்களுக்கான வயது 80-ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தற்போதைய திருத்தத்தின்படி தபால் ஓட்டு போடுவதற்கு தகுதியானவர்கள். இது தேவைப்படும் பிற இயலாமை ஆணைக்கு முற்றிலும் எதிரானது. மேலும் 65 வயது அடைந்தவர்களும் தபால் ஓட்டு போடுவதற்கே முன்னுரிமை தருவார்கள். இந்த புதிய திருத்தம் நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டவிரோதத்துக்கு வாய்ப்பு அளிப்பதோடு, வாக்குகளை இடையில் புகுந்து மாற்றுவதற்கும், சாதகவாதத்துக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் இருக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றவர்களை போன்று எந்த பாகுபாடும் இல்லாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வந்தனர்.

ஆனால் இந்த புதிய விதி 65 வயதுக்கு மேற்பட்டவர்களை சமுதாயத்தில் இருந்து துண்டிப்பதோடு, தேர்தல்களில் பங்கேற்பதில் இருந்தும் தேர்தல் ஆணையம் விலக்கி வைக்கிறது. 65 வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் என்றால் விதிகளை திருத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நிரந்தர திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று தொடர்ந்து இருக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறதா என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த 1ம் தேதியிட்ட தேர்தல் ஆணைய கடிதத்தில் இந்த திருத்தங்கள் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலுக்கு மட்டும்தான் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜார்க்கண்ட், டெல்லி மாநில மூத்த குடிமக்களுக்காக, இந்த திருத்தத்தை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் ஆலோசனை பெறாமல் பெரிய மாநிலமான தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. எனவே இந்த முடிவு தன்னிச்சையானது மட்டுமின்றி நியாயமற்றதும் கூட இந்த திருத்தத்தை தொடர விரும்பினால் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தவேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிரந்தர விதியாக கொண்டுவரக்கூடாது. ஜார்க்கண்ட், டெல்லி போன்ற சிறிய மாநிலங்கள் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு சமமானதா?

எனவே தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2019 மற்றும் தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020 ஆகியவற்றை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடன் கூட்டங்களை நடத்தி, சுதந்திரமாக வாக்களிக்கும் சட்டரீதியான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சிறந்த தீர்வு காண வேண்டும். இந்த சட்ட திருத்தம் அரசியலைமைப்பு சரத்துக்களுக்கு எதிரானது என
அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பொடுகு, முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மிளகு

Next Post

நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்

Next Post

நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version