கார் ரிப்பேர் செய்ய காசு தரவில்லை… பாராளுமன்ற வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கார் ரிப்பேர் செய்ய காசு தரவில்லை… பாராளுமன்ற வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

மலாவி நாட்டின் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டில் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் துணை சபாநாயகராக செயல்பட்டவர் தான் கிளமெண்ட் சிவாயா. இவருக்கு 50 வயதாகிறது. மாற்றுத்திறனாளியான கிளமெண்ட் தனது பதவிக்காலம் முடிவடையும் நேரத்தில் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் சில மாதங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து அந்த காரை சரி செய்யும் செலவை பாராளுமன்றமே ஏற்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த சமயத்தில் காருக்கான காப்பீட்டை அவர் புதுப்பிக்காததால், காலாவதி ஆகி உள்ளது. எனவே, காருக்கான ரிப்பேர் செய்யும் செலவை ஏற்க முடியாது என பாராளுமன்றம், கிளமெண்ட் சிவாயா அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

இதனையடுத்து நேற்று பாராளுமன்ற வளாகத்தில் சக்கர நாற்காலியில் வந்த கிளமெண்ட் சிவாயா தான் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியால் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிளமெண்ட் சிவாயா அவர்களின் உடலை கைப்பற்றி தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் பழுது பார்க்க ஆகும் செலவை பாராளுமன்றம் ஏற்காததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *