ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; 51 பயணிகளுடன் அடித்து செல்லப்பட்ட பேருந்து.. 21 பயணிகளின் நிலை தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!!

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; 51 பயணிகளுடன் அடித்து செல்லப்பட்ட பேருந்து.. 21 பயணிகளின் நிலை தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!!

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலத்தில் 51 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது, அந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 37 பேரை மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா். மேலும் 12 பேரை காணவில்லை. இதேபோல, அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்த சம்வமும் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம் மக்கள் மீட்கப்பட்டனா். 1.90 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன. பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் உள்ளது. மழையால் அந்த சுவரில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்திருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *