அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் ஹேக் செய்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்தது.
அதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் கணக்குகளையும் ஹேக் செய்துள்ளனர்.அவர்களுடைய பக்கத்தில் ‘‘நாங்கள் உங்களுக்கு பிட்காய்ன் மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டாலர் அனுப்பினால், 2 ஆயிரம் டாலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று’’ பதிவிட்டு ஒரு பிட்காய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர்.