ஈரானின் தென்மேற்கு பகுதியில் புஷர் துறைமுகம் என்னும் துறைமுகம் உள்ளது. இங்கு பிரமாண்டமான கப்பல் கட்டும் அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏழு கப்பல்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஈரானில் கடந்த ஒரு மாதமாக முக்கியமான இடங்களில் குண்டு வெடிப்பு அல்லது தீ விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ராணுவம், அணுசக்தி நிலையம், தொழில்துறை போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் சைபர் நாசவேலை என்று ஈரானின் அதிகாரிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி அதை மறுத்துள்ளார், ஈரானில் நடக்கும் மர்மமான ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.