கொரோனா எதிரொலி : இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்தில் தடை

கொரோனா எதிரொலி : இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்தில் தடை

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு காரணமாக இந்திய பயணிகள் நியூசிலாந்திற்கு வர தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2 வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் இந்த தொற்றால் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read more – போலி டோக்கன்.. கேலிக்கூத்து.. கும்பகோணத்தில் வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர்…

இந்தநிலையில், இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பல பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்த தடை நீட்டிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *