கவாசகி நிறுவனத்தின் 2021 Z250 மோட்டார்சைக்கிள் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கவாசாகி நிறுவனத்தின் Z250 மாடல் பைக் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது முதல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கவாசகி நிறுவனத்தின் 2021 மாடலான Z250 பைக், பியல் நைட் ஷேட் டியல் எக்ஸ் மெட்டாலிக் பிளேட் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி கார்டினல் ரெட் எக்ஸ் மெட்டாலிக் பிளேட் ஸ்பா்ர்க் பிளாக் என இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.
2021 மாடலில் உருவ வடிவமைப்பு பெரிய Z சீரிஸ் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 248சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த என்ஜின் 36.5 பிஹெச்பி பவர், 22.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டது.

மேலும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன், 17 இன்ச் அலாய் வீல்கள், சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் மற்றும் மோனோஷாக் யூனிட் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளது.




