ப்ப்பா!!..என்னா லுக்கு.. பிஎம்டபிஎள்யூ நிறுவனத்தின் புதிய R18 கிளாசிக் பைக்

ப்ப்பா!!..என்னா லுக்கு.. பிஎம்டபிஎள்யூ நிறுவனத்தின் புதிய  R18 கிளாசிக் பைக்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 பைக்கில் புது வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஆர்18 பர்ஸ்ட் எடிஷனை சார்ந்து,
பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆர்18 பைக்கின் கிளாசிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்திய விலையில் இதன் மதிப்பு ரூ.20 லட்சம் வரையில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

ஆர்18 கிளாசிக் மாடலில் 16 இன்ச் வீல், நேரான அமைப்பை கொண்ட வெளியேற்றுக் குழாய் வழங்கப்பட்டு உள்ளது. பர்ஸ்ட் எடிஷன் மாடலை போன்றே, கிளாசிக் மாடலிலும் 1802சிசி, பாக்சர் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 89.9 பிஹெச்பி பவர், 158 என்எம் டார்க் செயல்திறன் வழங்கக் கூடியது.

மேலும், ஆர்18 கிளாசிக் மாடலில் புல் எல்இடி முகப்பு விளக்கு, ஆக்சிலரி லைட்கள், பெரிய விண்ட்ஸ்கிரீன், சேடிள்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவை அனைத்தையும் கழற்றக்கூடிய வசதி மட்டுமின்றி, ஸ்டான்டர்டு ஆர்18 வேரியண்ட்டில் சேர்த்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக் டார்க் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், ரிவர்ஸ் கியர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் ஆர்18 கிளாசிக் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *