அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்?தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்?தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
50 சதவீத இடஒதுக்கீடு
உச்ச நீதிமன்றம் 31.8.2020 அன்று அளித்தத் தீர்ப்புக்கு எதிராக 100 விழுக்காடு இடங்களுக்குமே நீட் தேர்வின் அடிப்படையில், மத்திய மருத்துவ சேவைகள் இயக்குநரகம் மூலமாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கவுன்சிலிங் அறிவித்து, அதற்கான முடிவுகளைக் கடந்த 13.10.2020 அன்றே வெளியிட்டும் விட்டது.

ஆனாலும் இதுபற்றி அ.தி.மு.க. அரசு வாய் திறக்காமல் மவுனியாக இருக்கிறது. மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் இடங்கள் 50 விழுக்காடு வழங்கும் ஒரு நல்வாய்ப்பை முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் கோட்டை விட்டுள்ளனர்.
மீட்டெடுக்காதது ஏன்?
அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுப்பதால் அவர்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர்சிறப்புச் சிகிச்சை அளித்தால், அது ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏன் இன்னும் உணரவில்லை?

ஆனால், தற்போது இழந்த மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு உள்ஒதுக்கீடு உரிமையை எடப்பாடி பழனிசாமி மீட்டெடுக்காமல் மத்திய அரசுடன் இணக்கமாகப் பயந்து செல்வதேன்?
இடஒதுக்கீடு வேண்டும்
ஆகவே, அரசு மருத்துவர்களுக்கு 2016-க்கு முன்பு வரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *