ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மே 2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.அடுத்த நாளே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் பங்கேற்பதன் காரணமாக மே 3 -ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பொதுத்தேர்வை சில நாட்கள் தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்கிறது. மேலும் தற்போது கொரொனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மே மாதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

முன்னதாக ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *